/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டு மாடுகளின் தொல்லை; கட்டுப்படுத்த புது யோசனை
/
காட்டு மாடுகளின் தொல்லை; கட்டுப்படுத்த புது யோசனை
ADDED : மே 06, 2024 12:33 AM
உத்தரகோசமங்கை : 'ஹெர்போலிவ்' என்ற மருந்தினை தெளிப்பதால் காட்டுமாடுகள் தொந்தரவு இருக்காது என மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை ஊராட்சிக்குட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்திக் கொண்டிருக்கும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறையை மதுரை வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி நிலைய மாணவிகள் விவசாயிகளிடம் செயல் விளக்கமளித்தனர்.
தமிழ்நாடு வேளாண் மை பல்கலைக்கழகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட 'ஹெர்போலிவ்' என்ற மருந்தினை ஸ்பிரே நடமாட்டம் உள்ள பயிர்களில் தெளிப்பதினால் காட்டு மாடுகள், எருமை, காட்டுப்பன்றி போன்றவைகளால் தொந்தரவு இருக்காது.
இதனை தெளிப்பதினால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அவை நுகர்ந்தவுடன் சென்றுவிடும் என ஆலோசனை தெரிவித்தனர்.