/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிவுகளால் வீணாகிய எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் மீ்ட்கப்படுமா
/
கழிவுகளால் வீணாகிய எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் மீ்ட்கப்படுமா
கழிவுகளால் வீணாகிய எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் மீ்ட்கப்படுமா
கழிவுகளால் வீணாகிய எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் மீ்ட்கப்படுமா
ADDED : செப் 07, 2024 05:06 AM

குளம் மீட்கப்படுமா
பரமக்குடி: -பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் உள்ள எமதீர்த்தம் என்று அழைக்கப்படும் மாமாங்க தெப்பக்குளம் கேட்பாரற்று கழிவுகளால் நிரம்பி வழிகிறது.
எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற தலமாக எமனேஸ்வரமுடையவர் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் சொர்ணகுஜாம்பிகை அம்மன் தனி சன்னதியில் உள்ளார்.
புராணத்தில் சிவ பக்தரான மார்க்கண்டேயனுக்கு முக்தி அளித்த போது சிவபெருமானால் எமன் சாபத்திற்கு உள்ளானார். இதனால் இழந்த பதவியைப் பெற இங்கு எமன் தரிசனம் மேற்கொண்டார்.
இக்கோயிலில் ஆயுள் சிறக்கவும், இழந்த பதவியை பெறவும் பக்தர்கள் தரிசிக்கின்றனர்.
இந்நிலையில் கோயில் எதிரில் கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக மாமாங்க தெப்பக்குளம் இருக்கிறது. இத்தீர்த்தம் எமதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இதன்படி மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் பெற்றது எமனேஸ்வரம்.
ஆனால் எமதீர்த்தம் கடந்த 20 ஆண்டுகளாக கவனிப்பாரற்று கழிவு நீரால் நிரம்பி வழிகிறது. நகராட்சி சார்பில் கட்டப்படும் சுகாதார வளாகங்கள், அங்கன்வாடி மையம் என குளத்தை மேவி கட்டியுள்ளனர்.
மேலும் குப்பை கொட்டும் இடமாக மாறி சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கழிவு நீரும் இத்தீர்த்தத்தில் விடப்படுகிறது.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டிய நிலையில் கடந்த ஆண்டுகளில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பார்வையிட்டு நிதி ஒதுக்கி படித்துறை மற்றும் வேலி என ஒரு புறம் மட்டும் அமைக்கப்பட்டது.
இவை அனைத்தும் வீணாகும் வகையில் குப்பை கொட்டி கருவேல மரங்களால் மூடப்பட்டுள்ளது.
அரசு ஆன்மிகம் தொடர்பான கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் நிலையில் நீர் ஆதாரமாக விளங்கும் இது போன்ற தீர்த்த குளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.