/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழை பெய்யுமா? மக்கள் எதிர்பார்ப்பு
/
மழை பெய்யுமா? மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 10, 2024 11:20 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மழை பெய்யுமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். திருவாடானை, தொண்டி பகுதியில் கடும் வெயிலால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும். வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று திருவாடானை பகுதியில் மேக மூட்டமாக இருந்தது. மழை பெய்யவில்லை. வெப்பம் குறையவில்லை.
வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த கோடை மழை பெய்து வெப்பத்தை குறைக்குமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.