/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மங்களக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
/
மங்களக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
மங்களக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
மங்களக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
ADDED : ஆக 30, 2024 10:08 PM
திருவாடானை: மங்களக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, ஸ்கேன் வசதி செய்து தர மக்கள் வலியுறுத்தினர்.
திருவாடானை அருகே மங்களக்குடியில் ஆரம்பசுகாதார நிலையம் உள்ளது. இங்கு மங்களக்குடி, குருந்தங்குடி, கடம்பூர், சம்பூரணி, ஊமைஉடையான்மடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அருகே உள்ள துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 100க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக செல்லும் போது அவர்களுக்கு ஸ்கேன் வசதியில்லாததால் தேவகோட்டை செல்கின்றனர்.
அல்லது தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அதிகம் செலவாகிறது. இதனால் ஏழை பெண்கள் மிகவும் பாதிக்கப்டுகின்றனர். தொண்டியில் ஸ்கேன் வசதியிருந்தும் செயல்படாமல் உள்ளது. மங்களக்குடி ஊராட்சியை சுற்றிலும் 6000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்து கர்ப்பணிகள் பயன்பெறும் வகையில் ஸ்கேன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.