/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்குவரத்து நெருக்கடியில் ராமநாதபுரம் - மதுரை ரோடு ஒழுங்கு படுத்தப்படுமா
/
போக்குவரத்து நெருக்கடியில் ராமநாதபுரம் - மதுரை ரோடு ஒழுங்கு படுத்தப்படுமா
போக்குவரத்து நெருக்கடியில் ராமநாதபுரம் - மதுரை ரோடு ஒழுங்கு படுத்தப்படுமா
போக்குவரத்து நெருக்கடியில் ராமநாதபுரம் - மதுரை ரோடு ஒழுங்கு படுத்தப்படுமா
ADDED : மே 25, 2024 05:24 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் மதுரை ரோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. போக்குவரத்துத்துறையினர் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாணட் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அனைத்து பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் போது பல முறை ரேக்குகள் மாறி நுழைகின்றன.
எந்த ரேக்கில் எந்த பஸ் நிற்கும் என தெரியாமல் பயணிகள் பரிதவிக்கின்றனர். இரவில் கடைசி பஸ்சை பிடிக்கும் பதட்டத்தில் இருக்கும் பயணிகள் பஸ் ரேக் மாறி செல்வதால் பயணிகள் ஒவ்வொரு ரேக்குக்கும் மாறி மாறி அலையும் நிலை உள்ளது.
சில நேரங்களில் பஸ்களை தவற விட்டு இரவு முழுவதும் பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மதுரை ரோட்டில் பஸ்கள் வரும் போது அரசு போக்குவரத்துக்கழக வளாகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்கள் டீசல் நிரப்புவதற்காக வரிசையாக ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. ஒரே நேரத்தில் பல பஸ்கள் டீசல் நிரப்ப வருவதால் பஸ்கள் வேறு வழியின்றி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வாசலில் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டாப்புகளில் பஸ்கள் நிற்கும் போது அரசு மருத்துவக்கல்லுாரிக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் அவசர சிகிச்சைக்கு வழி கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. இது போன்று மதுரை ரோட்டில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும். தற்போது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் உரிய ரேக்குகளில் நிறுத்த போக்குவரத்துக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

