/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதுக்கரையில் பக்தர்களுக்கு இடையூறாக கால்நடைகள்: நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்

UPDATED : மார் 05, 2025 09:59 AM
ADDED : மார் 04, 2025 10:14 PM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே சேதுக்கரைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராட வருகின்றனர். சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்து திரும்புகின்றனர்.
இந்நிலையில் காலை முதல் இரவு வரை அப்பகுதியில் உள்ள ஆடுகள், மாடுகள் உள்ளிட்டவைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் கடற்கரை ஓரத்தில் திதி உள்ளிட்ட பூஜைகளை செய்யும் போது இடையூறு செய்கின்றன. மாடுகள் பூஜை பொருட்களை குறிவைத்து வருவதால் அச்சமடைகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் புரோகிதர்கள் கூறியதாவது:
சேதுக்கரைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் புனித நீராட வருகின்றனர். கடற்கரை வளாகத்தில் உலா வரும் கால்நடைகள் பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றன. பச்சரிசி, வெல்லம், வாழை இலை உள்ளிட்டவைகளை உடனடியாக தின்று விடுகின்றன.
இதனால் பூஜைக்கு வருவோர் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சேதுக்கரை ஊராட்சி நிர்வாகம் பொது மக்களின் நலன் கருதி பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் கால்நடைகளை மேய விடுவோருக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.