/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய கோயில் தங்கும் விடுதியில் கழிப்பறை கூடம் அமைக்கப்படுமா
/
பழைய கோயில் தங்கும் விடுதியில் கழிப்பறை கூடம் அமைக்கப்படுமா
பழைய கோயில் தங்கும் விடுதியில் கழிப்பறை கூடம் அமைக்கப்படுமா
பழைய கோயில் தங்கும் விடுதியில் கழிப்பறை கூடம் அமைக்கப்படுமா
ADDED : ஜூலை 05, 2024 10:43 PM

ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் பயன்பாடின்றி உள்ள தங்கும் விடுதியில் கழிப்பறை கூடம் அமைக்க வேண்டும்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் இயற்கை உபாதை கழிக்க வசதியின்றி பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதில் வயதான பக்தர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் கிழக்கு ரதவீதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான பழமையான தங்கும் விடுதி 7 ஆண்டுகளாக பயன்பாடுன்றி உள்ளது. இதனை அகற்றி புதிய கழிப்பறை, குளியலறை கட்டடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஹிந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. எனவே பக்தர்கள் நலன் கருதி இங்கு கழிப்பறை, குளியலறை கட்டடம் விரைவில் அமைக்க ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.