ADDED : மார் 03, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பொன்னு 25. நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து தொண்டிக்கு பஸ்சில் சென்றார்.
அவருடைய குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் தாயத்து, பர்சிலிருந்த ரூ.5000 திருடு போனது.
அப்போது பஸ்சிலிருந்து இறங்கி தப்பிக்க முயன்ற பெண்ணை மற்ற பயணிகள் பிடித்தனர். விசாரணையில் பேராவூரணி தாலுகா வல்லவன்பட்டினத்தை சேர்ந்த தேன்மொழி 55, என தெரிந்தது. அவரை தொண்டி போலீசார் கைது செய்து பணம், நகையை கைப்பற்றினர்.