ADDED : மார் 22, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே தோட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் தமிழரசி 37.
நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள முருங்கை மரத்தில்  காய்களை பறிப்பதற்காக இரும்பு கம்பியால் ஆன கம்பால் முயன்றார். அப்போது வீட்டிற்கு மேல் சென்ற மின் கம்பி உரசியதில் தமிழரசி உடல் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.  திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

