நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : கடலாடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வீரபாண்டி 50. இவர் வளர்க்கும் ஆடுகளை மதுரை மாவட்டம் சோழவந்தான் தாமோதரன்பட்டி பகுதி வயலில் கிடை அமர்த்தி வந்தார்.
நேற்று காலை அப்பகுதி அய்யப்பநாயக்கன்பட்டி முத்துராமலிங்கம் வயல் அருகே ஆடுகளுக்கு இரைக்காக மர இலைகள் பறிக்க சென்றார். அப்போது பன்றிகளுக்காக நெல் வயலை சுற்றி அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி இறந்தார்.
காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

