/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் உலக புவி தின கொண்டாட்டம்
/
சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் உலக புவி தின கொண்டாட்டம்
சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் உலக புவி தின கொண்டாட்டம்
சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் உலக புவி தின கொண்டாட்டம்
ADDED : ஏப் 27, 2024 04:18 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில்உலக புவி தினம் கொண்டாட்டம் நடந்தது.
கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் வாழ்த்தினார். சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திவ்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் விற்பனை குழு செயலாளர் ராஜா பேசியதாவது:
நாம் வாழும் புவியை பாதுகாக்க ஒவ்வொருவரும் கடமையாற்ற வேண்டும். இந்த வருட புவி தினத்திற்கான கருத்துரு கிரகம் மற்றும் நெகிழி என்று உலக சுற்றுச்சூழல் மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் நெகிழியை தவிர்த்தல், நெகிழியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல், நெகிழியால் செய்யப்பட்ட பொருட்களை மறு சுழற்சி செய்தல் என்ற மூன்று காரியங்களை செய்ய வேண்டும். நெகிழி இல்லாத உலகை உருவாக்க வேண்டும். நாம் மஞ்சள் பைகளை மீண்டும் பயன்படுத்தவேண்டும், என்றார்.
பின் அவர் மாணவர்களின் சுற்றுசூழல் குறித்த கட்டுரைகளையும், மாணவர்கள், ஆசிரியர்கள் செய்த சுற்றுச்சூழல் உபகரணங்களையும் பார்வையிட்டு பாராட்டுக்களை தெரிவித்தார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள்நடப்பட்டன. சுற்றுச்சூழல் மன்றத்தின் மாணவர் ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி கூறினார்.

