/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகா சிவராத்திரியில் பனி லிங்க வழிபாடு
/
மகா சிவராத்திரியில் பனி லிங்க வழிபாடு
ADDED : பிப் 28, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பனி லிங்க வழிபாடு நடந்தது.
நேற்றுமுன்தினம் இரவு துவங்கி அதிகாலை வரை பனிக்கட்டியால் ஆன சிவலிங்கத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட 21 வகை பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஒன்பது சிவலிங்கங்களுக்கு பெண்கள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள் பங்கேற்றனர்.

