நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் சுந்தரராஜ மூர்த்தி, பேச்சியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, யாகசாலை பூஜை நடந்தது.
பின்பு மூலவரான சுந்தரராஜ மூர்த்தி, பேச்சியம்மனுக்கு 21 வகை அபிஷேகம், பூஜை நடந்தது. விழா கமிட்டியாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மக்கள் பலர் கலந்து கொண்டனர்.