/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானிய விலையில் விதை வாங்கி எள் பயிர் பண்ணை அமைக்கலாம்
/
மானிய விலையில் விதை வாங்கி எள் பயிர் பண்ணை அமைக்கலாம்
மானிய விலையில் விதை வாங்கி எள் பயிர் பண்ணை அமைக்கலாம்
மானிய விலையில் விதை வாங்கி எள் பயிர் பண்ணை அமைக்கலாம்
ADDED : மார் 03, 2025 05:30 AM
ராமநாதபுரம், மார்ச் 3-
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் விதைகளை வாங்கி எள் பயிரில் விதைப்பண்ணை அமைத்து லாபம் பெறலாம்.
ராமநாதபுரம் விதைச் சான்றளிப்பு, உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் (பொ) சக்திகணேஷ் தெரிவித்துள்ளதாவது: எள் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் வரிசைக்கு வரிசை 30 செ.மீ.இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளி விட்டு விதைத்து ஒருசதுரமீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
விதைத்த 15, 35 நாட்களில் களை எடுத்தல் அவசியம். தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்கவும்.
இதனுடன் 2 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்துக் கொள்ளவும். மேலும் விதைச்சான்று தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில்செய்வதால் கூடுதல் மகசூல் பெறலாம்.
எனவே எள் விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், உதவி விதை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.