/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதி சிறகுகள் தொழில் மையங்களில்தொழில் துவங்க ஆலோசனை பெறலாம்
/
மதி சிறகுகள் தொழில் மையங்களில்தொழில் துவங்க ஆலோசனை பெறலாம்
மதி சிறகுகள் தொழில் மையங்களில்தொழில் துவங்க ஆலோசனை பெறலாம்
மதி சிறகுகள் தொழில் மையங்களில்தொழில் துவங்க ஆலோசனை பெறலாம்
ADDED : ஆக 16, 2024 03:57 AM
ராமநாதபுரம்: வாழ்ந்து காட்டும் திட்டத்தில் செயல்படும் மதி சிறகுகள் தொழில் மையத்தில் மகளிர் குழுவினர், பொது மக்களுக்கு தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக வளாகம், திருவாடானை தாலுகா சி.கே. மங்கலம் கிராமத்தில் கைகாட்டி ஆகிய இடங்களில் மதி சிறகுகள் தொழில் மையங்கள் உள்ளன. இங்கு இ- சேவை சார்ந்த அனைத்து சேவைகளும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு தயாரித்தல், தொழில்நுட்ப விபரங்கள் அளித்தல், திறன் வளர்ப்பு விபரங்கள் அளித்தல், சந்தை இணைப்பு பற்றிய தகவல்கள் வழங்குதல், நிதி இணைப்பு ஏற்படுத்துதல், ஊரக தொழில் முனைவோர்கள் புதிய தொழில் துவங்க, தற்போதைய தொழிலை மேம்படுத்துவது ஆகிய சேவைகளுக்கு இம்மையத்தை அணுகி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறலாம்.இச்சேவைகளுக்கு திருவாடனை மையத்தை 90477 08040, கலெக்டர் அலுவலக மையத்தை 72004 36477, 88835 54468 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.-------

