/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனைக்குளத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
/
பனைக்குளத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பனைக்குளத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பனைக்குளத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
ADDED : செப் 01, 2024 05:02 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே பனைக்குளம் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது மகன் முகமது ரியாஸ் 24. இவர் அந்தப்பகுதியில் உள்ள கோழிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். சிறுமியின் தாய் இறந்து விட்டதால் தந்தை வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தாத்தாவின் பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார். முகமது ரியாஸ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்.
சிறுமியின் உடலில் மாற்றம் தெரிந்ததையடுத்து தேர்போகி மருத்துவமனையில் பரிசோதித்த போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து குழந்தைகள் நலப்பாதுகாப்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியிடம் விசாரித்து, அவரது புகாரின் பேரில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து முகமது ரியாசை கைது செய்தனர்.----