/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
/
ராமநாதபுரத்தில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
ADDED : மே 26, 2024 04:02 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் கஞ்சா பதுக்கிய வாலிபரை கைது செய்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த வாலிபர் தப்பி ஓடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் முனிசாமி மகன் சக்தி கணேஷ் 20, என்பது தெரிய வந்தது.
அவரிடம் விசாரித்ததில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை காட்டூரணியை சேர்ந்த அசோக் என்பவரிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வாங்கி வந்ததாக தெரிவித்தார். போலீசார் அசோக்கை தேடி வருகின்றனர்.--------