/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் பொது பிரச்னைகளை சுட்டிக்காட்ட தயாராகும் இளைஞர்கள்
/
ஊராட்சிகளில் பொது பிரச்னைகளை சுட்டிக்காட்ட தயாராகும் இளைஞர்கள்
ஊராட்சிகளில் பொது பிரச்னைகளை சுட்டிக்காட்ட தயாராகும் இளைஞர்கள்
ஊராட்சிகளில் பொது பிரச்னைகளை சுட்டிக்காட்ட தயாராகும் இளைஞர்கள்
ADDED : செப் 16, 2024 05:04 AM
கடலாடி : உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் பகுதியில் திட்டப் பணிகளை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் முறையாக நிறைவேற்றப்படாத அரசின் திட்ட நிதியை வீணடிப்பதை குறிப்பெடுத்துக் கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது. அவற்றை இதுவரை செய்யாமல் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் நிறைவேற்றுவோம் என வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
பெரும்பாலான திட்டப் பணிகளை உள்ளூர் மக்களை கலந்து கேட்காமல் தங்களது நோக்கம் போல் அரசின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். டார்க்கெட் வைத்து அவசரகதியில் செய்யப்படும் திட்டத்தால் பெரும்பாலான திட்ட பணிகள் காட்சி பொருளாகவும் பயன்பாடின்றி விரைவில் சேதமடைகின்றன.
நீண்ட நாள் போடப்படாத சாலை, மின் கம்பம், குடிநீர் வசதி, சமுதாய கழிப்பறை உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யக் கூறி மனு அளித்து வருகிறோம். ஊராட்சி சார்பில் நடக்கக்கூடிய கிராம சபை கூட்டம் மற்றும் ஒன்றியக் குழு கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை முறையாக கேட்டு அறிந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் நிறைவேற்றாத பணிகளை பட்டியலிட்டு அவற்றை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

