/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்துள்ள அபிராமம் ரோடு 10 கி.மீ., சுற்றுவதால் மக்கள் அவதி
/
சேதமடைந்துள்ள அபிராமம் ரோடு 10 கி.மீ., சுற்றுவதால் மக்கள் அவதி
சேதமடைந்துள்ள அபிராமம் ரோடு 10 கி.மீ., சுற்றுவதால் மக்கள் அவதி
சேதமடைந்துள்ள அபிராமம் ரோடு 10 கி.மீ., சுற்றுவதால் மக்கள் அவதி
ADDED : அக் 07, 2024 10:59 PM

கமுதி: கமுதி அருகே பாப்பனம் கிராமத்தில் இருந்து அபிராமம் செல்லும் ரோடு பராமரிப்பின்றி 10 கி.மீ., சுற்றி செல்லும் அவலநிலை உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கமுதி அருகே பாப்பனம் ஊராட்சி முத்துவிஜயபுரம், குன்றங்குளம், புல்லந்தை, பாப்பனம், தீர்த்தான், அச்சங்குளம் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும், விதைகள், உரங்கள் வாங்கி அபிராமத்தில் இருந்து கிருதுமால் நதி வழியாக 2 கி.மீ.,ல் மங்கம்மாள் ரோட்டை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
முறையாக சீரமைக்கப்படாததால் தற்போது ரோடு சேதமடைந்து சீமைக்கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளது. இவ்வழியே செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கும், கர்ப்பிணிகள் இச்சாலையில் செல்ல முடியாததால் பூதத்தான் கிராமம் வழியாக 10 கி.மீ., சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது. அவசர காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
அபிராமம் ரோட்டை முறையாக பராமரித்து புதிதாக ரோடு அமைக்கவும், இதே போன்று ரோட்டின் குறுக்கே கிருதுமால் நதி செல்வதால் தரைப்பாலம் அமைக்க வேண்டும். இங்கு புதிதாக ரோடு அமைத்தால் நந்திசேரி, பூதத்தான் உட்பட பல்வேறு கிராம மக்கள் பயனடைவார்கள். எனவே மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.