/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மயில்களின் சரணாலயமாக விளங்கும் 10 கிராமங்கள்
/
மயில்களின் சரணாலயமாக விளங்கும் 10 கிராமங்கள்
ADDED : ஜன 02, 2025 04:49 AM

ரெகுநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் மயில்கள் அதிகமாக உள்ளதால் இப்பகுதியை மயில்களின் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேதலோடை, குத்துக்கல் வலசை, தினைக்குளம், ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, சின்னாண்டி வலசை, நேருபுரம், களிமண்குண்டு, உமையன் வலசை, கொட்டியக்காரன் வலசை, உத்தரவை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் தேசிய பறவையான மயில்களின் வாழ்விடமாக உள்ளன.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
இப்பகுதியில் அதிகளவில் தென்னந்தோப்பு, பனை மரங்கள் மற்றும் நெல் வயல்கள் உள்ளன. இயற்கை சார்ந்த அதிக மண் வளமிக்க இப்பகுதியில் இரை தேடுவதற்காக ஏராளமான மயில்கள் காலை, மாலை நேரங்களில் கூட்டமாக வயல்வெளிக்கு வருகின்றன.
கிராம மக்கள் மயில்களை ஆர்வமுடன் பாதுகாக்கின்றனர். மயில்கள் இரை தேடிக்கொண்டு ஓர் இடத்தில் இருந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து அவற்றை உடன் அழைத்துச் செல்லும் பாங்கு அழகுற அமைந்துள்ளது. மயில்களின் நடமாட்டத்தால் இப்பகுதி கிராமங்கள் அழகு மிளிர்வதாக தெரிவித்தனர்.

