/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
/
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
ADDED : அக் 04, 2025 10:22 PM
திருவாடானை : திருவாடானை தாலுகா வில் நெல் மற்றும் சில வகையான தோட்டப் பயிர் சாகுபடி நடக்கிறது. கிணறு, போர்வெல் வசதி யுள்ளவர்கள் நீரை சிக் கனத்துடன் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை யினர் நுண்ணீர்ப் பாசனம் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
வேளாண் அலுவலர்கள் கூறுகையில், பிரதமரின் நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் தெளிப்பு நீர், சொட்டு நீர் பாசனம் ஆகிய 2 முறைகள் உள்ளன.
இதன் மூலம் நீர் எளிதாக வேருக்கு செல்லும். உரமிடுதலையும் எளிதாக்குகிறது. மேலும் களை கட்டுபடுத்துவதும் எளிதானது. இதற்கான கருவிகள் திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். பயன் பெற விரும்புவோர் ஆதார், ரேஷன்கார்டு, போட்டோ, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், சிறு, குறு விவசாயிக்கான சான் றுடன் வேளாண் மற்றும் தோட்டக்கலைதுறை அலுவலகத்தை அணுகலாம் என்றனர்.