ADDED : ஏப் 03, 2026 05:27 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே வாக்காளர்களிடையே நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாவட்டத்திற்கான டால்பின் லோகோவை வெளியிட்டார். வாக்காளர் விழிப்புணர்வு நோட்டீஸ்கள், மக்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு, உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது, அரசு அலுவலர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.
