/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது
/
100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது
ADDED : டிச 15, 2024 07:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கன மழையால் வேரோடு சாய்ந்தது. திருவாடானை அருகே கருமொழி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரத்தில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி பல ஆண்டுகளாக தங்கியிருந்தன.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த இந்த மரம் நேற்று காலை வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிகம் சென்றன. ஆலமரம் ரோட்டில் சாயாமல் அருகிலுள்ள கண்மாய்க்குள் சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.