/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
1000 பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை புறப்பாடு
/
1000 பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை புறப்பாடு
ADDED : பிப் 04, 2025 05:00 AM

திருவாடானை: திருவாடானை, தொண்டியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழநியில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. திருவாடானை, தொண்டி பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். நேற்று அதிகாலை சிறுவர்கள், முதியோர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக புறப்பட்டனர். பக்தர்கள் கூறியதாவது:
ஏழு முதல் எட்டு நாட்களுக்குள் பழநிக்கு சென்று விடுவோம். அங்கு காவடி, பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவோம். நேற்று காலை திருவாடானை கல்லுாரியில் எங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதே போல் பல்வேறு ஊர்களில் ஏராளமானோர் அன்னதானம், பிஸ்கட் வழங்குவார்கள். ஆங்காங்கே இரவில் தங்கியிருந்து பாதயாத்திரை செல்வோம் என்றனர்.