/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை
/
பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை
பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை
பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா 1008 விளக்கு பூஜை
ADDED : ஜன 06, 2024 05:43 AM

சாயல்குடி: -வருண பகவானால் பூஜிக்கப்பட்ட புராண இதிகாசத்துடன் தொடர்புடைய கடற்கரை சிவாலயமாக மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயில் திகழ்கிறது. இங்கு நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு கோயில் வளாகத்தில் 1008 விளக்கு பூஜை வழிபாடு நடந்தது.
பூஜைகளை சேவா பாரதி தென் தமிழ்நாடு கடலாடி ஒன்றியத்தினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர்.
இரவு 8:00 மணிக்கு சமஸ்தானம் சார்பில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி அம்பாள் உற்ஸவ மூர்த்திகளாய் மாரியூர் கடற்கரையில் எழுந்தருளினர். கடற்கரையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டி சார்பில் அபிஷேக ஆராதனை, உச்சிக்கால பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வெளிப்பிரகார வீதி உலா நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தீர்த்தவாரி உற்ஸவ விழா நடக்கிறது.