ADDED : பிப் 26, 2024 12:55 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார் : முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவர் செல்லி அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவிய பொடி உட்பட 21 வகை அபிஷேகம், தீபாரானை நடந்தது.
செல்லி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் சாந்தா தலைமையில் 108 விளக்கு பூஜை நடந்தது.இதில் முதுகுளத்தார், துாரி, செல்வநாயகபுரம் அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
