/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
10, பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி கையேடு! அரையாண்டு தேர்விற்கு முன்பு வழங்க முடிவு

ADDED : அக் 12, 2024 11:13 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நடப்பு கல்வி ஆண்டில் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறும் வகையில் பத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கையேடு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 2022--23ம் கல்வியாண்டில் மாநில அளவில் 12ம் இடத்தில் இருந்து முன்னேறி 2023-24 கல்வி ஆண்டில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2021-2022 கல்வியாண்டில் 97.20 சதவீதம் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றிருந்த நிலையில் 2022-23 ல் 96.30 சதவீதம் பெற்று 12ம் இடம் பெற்றனர். 2023-24 கல்வி ஆண்டில் 94.89 சதவீதம் பெற்று 15 இடம் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் முன்னேற்றம், பிளஸ் 2 பின்னடைவு என்ற நிலையில் வரும் 2024-25ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து காலாண்டு தேர்வில் தோல்வி அடைந்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கையேடு வழங்கவும் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜீ தலைமையில் நடந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பயிற்சி கையேட்டில் இடம்பெற வேண்டியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரையாண்டு தேர்விற்கு முன்னதாக இந்த மாதமே பத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.--