/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலைத்திருவிழா போட்டியில் 11 மாணவர்கள் பங்கேற்பு
/
கலைத்திருவிழா போட்டியில் 11 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 28, 2025 08:06 AM
திருவாடானை: திருவாடானை வட்டாரத்தில் இருந்து மாநில அளவில் நடக்கும் கலைத்திருவிழாவில் 11 மாணவர்கள் பங்கேற்றனர்.
திருவாடானை வட்டாரத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி கடந்த ஆகஸ்ட் முதல் நடந்து வருகிறது. மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி அளவில், வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் 11 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

