/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 1164 மோசடி பத்திரங்கள் புகார் 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் 20 பேர்
/
ராமநாதபுரத்தில் 1164 மோசடி பத்திரங்கள் புகார் 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் 20 பேர்
ராமநாதபுரத்தில் 1164 மோசடி பத்திரங்கள் புகார் 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் 20 பேர்
ராமநாதபுரத்தில் 1164 மோசடி பத்திரங்கள் புகார் 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் 20 பேர்
ADDED : டிச 09, 2024 05:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 3 ஆண்டுகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 1164 மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் 20 பேர் பணிபுரிவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகம் குறித்து தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா மதகனேரியை சேர்ந்த வரதன் அனந்தப்பன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2023 ஜூலை 21ல் விண்ணப்பம் செய்திருந்தார்.
இதற்கு வழங்கியுள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1164 மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் 193 புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பத்திரப்பதிவு தலைவர் சுற்றறிக்கையில் புகார் மனுக்கள் மீது மாவட்ட பதிவாளர்கள் நவவடிக்கை மேற்கொள்ள கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடி பத்திரப்பதிவுகளை விசாரிக்கும் அலுவலகத்தில் சார்பதிவாளர் நிர்வாகம், சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்) 1, கட்டுநர் 1, இரவுக்காவலர் 1 என காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஒர இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்கள் உதவியாளர்கள் 11 பேர், இளநிலை உதவியாளர்கள் 6 பேர், அலுவலக உதவியாளர்கள் 3 பேர் என, 20 பேர் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளில் 1164 மோசடி பத்திரங்கள் புகார் வந்துள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.