/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தொகுதியில் 1199 இளம் வாக்காளர் மனு
/
திருவாடானை தொகுதியில் 1199 இளம் வாக்காளர் மனு
ADDED : நவ 26, 2024 04:52 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் 1199 இளம் வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்ப மனுக்கள் அளித்தனர்.
சுருக்கமுறை திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் கமிஷன் ஜன.1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்கவும், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், நீக்கம் செய்யவும் முகாம்களை நடத்த உத்தரவிட்டது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடந்தது. தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: திருவாடானை சட்டசபை தொகுதியில் 247 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஜன.1ல் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் அனைவரையும் தவறாமல் பட்டியலில் இணைக்கும் வகையில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது.
நவ.,16, 17, 23, 24ம் தேதிகளில் நடந்த சிறப்பு முகாம்களில் 1199 இளம் வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற விண்ணப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர் என்றனர்.