/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் 11வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டம் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி
/
பரமக்குடியில் 11வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டம் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி
பரமக்குடியில் 11வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டம் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி
பரமக்குடியில் 11வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டம் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஆக 08, 2025 03:02 AM

பரமக்குடி: பரமக்குடியில் 11வது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.இதில் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சுதேசி இயக்கம் 1905 ஆக.,7ல் துவக்கப் பட்டதை நினைவு கூறும் வகையில் கைத்தறி நெசவாளர்களை கவுரவப் படுத்தும் விதமாக தேசிய கைத்தறி தினம் கொண் டாடப்படுகிறது.
நேற்று பரமக்குடி-எமனேஸ்வரம் பகுதியில் நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் தலைமை வகித்து பேசியதாவது:
பரமக்குடி-எமனேஸ் வரம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் தமிழ்நாட்டின் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப சேலைகளை நெய்கின்றனர். மானம் காக்கும் தொழில் செய்யும் நெசவாளர்களை தலை வணங்கி பாராட்டுகிறேன் என்றார்.
தாசில்தார் வரதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் வர வேற்றார்.
டாக்டர் பிரதீபா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. இதில் பொது மருத்துவ பரி சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து பத்து நெச வாளர்களுக்கு முத்ரா கடன் உதவி திட்டத்தில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் ரூபாயும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் 15 பேருக்கு ரூ.7.17 லட்சம், கைத்தறி ஆதரவு திட்டத்தில் 430 பேருக்கு ரூ. 28.71 லட்சம் மதிப்பில் அச்சு மற்றும் விழுதுகள், மின்மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந் திரம், ஜக்கார்டு பெட்டி, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 2 பேருக்கு ரூ. 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.
பரமக்குடியில்நெய்யப்பட்ட கைத்தறி சேலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.