/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில் மறியலுக்கு முயன்றதால் எஸ்.டி.பி.ஐ.,யினர் 128 பேர் கைது
/
ரயில் மறியலுக்கு முயன்றதால் எஸ்.டி.பி.ஐ.,யினர் 128 பேர் கைது
ரயில் மறியலுக்கு முயன்றதால் எஸ்.டி.பி.ஐ.,யினர் 128 பேர் கைது
ரயில் மறியலுக்கு முயன்றதால் எஸ்.டி.பி.ஐ.,யினர் 128 பேர் கைது
ADDED : செப் 20, 2024 07:12 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மீனவர்களை விடுவிக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலுக்கு முயன்ற எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 128 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை சிறையில் தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசையும், மீனவர்களையும் படகையும் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ள மத்திய அரசை கண்டித்தும் நேற்று மண்டபம் ரயில் நிலையத்தில் மறியல் செய்ய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.
இவர்களை மண்டபம் போலீசார் சமரசம் செய்ய முயன்ற நிலையில் மண்டபம் ரயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர்.
இதையடுத்து போலீசார் எஸ்.டி பி. ஐ., மாநில செயலாளர் அபுபக்கர் தலைமையில் 128 பேரை கைது செய்து மண்டபம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வேனில் அழைத்து சென்றனர்.