/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கரக்கோட்டையில் 12-வது போலீஸ் பட்டாலியன் அலுவலகம் திறப்பு
/
சக்கரக்கோட்டையில் 12-வது போலீஸ் பட்டாலியன் அலுவலகம் திறப்பு
சக்கரக்கோட்டையில் 12-வது போலீஸ் பட்டாலியன் அலுவலகம் திறப்பு
சக்கரக்கோட்டையில் 12-வது போலீஸ் பட்டாலியன் அலுவலகம் திறப்பு
ADDED : செப் 23, 2025 04:04 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் 12ம் போலீஸ் பட்டாலியன் அணிக்கான அலுவலகம், குடியிருப்பு கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியில் நேற்று திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் அடுத்த சக்கரக்கோட்டையில் 12 வது பட்டாலியன் போலீஸ் படைக்கான கட்டடம் கட்ட 2019ல் அரசு அனுமதி அளித்தது. இதற்காக சக்கரக்கோட்டையில் 79 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு நிர்வாக அலுவலகம், ஆயுதக் கிடங்கு, குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடப் பணி 2023ல் நிறைவடைந்த நிலையில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.34.03 கோடியில் தலைமை அலுவலகம், ஆயுதக் கிடங்கு உள்ளிட்ட 5 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ரூ.55.66 கோடியில் கமாண்டன்ட், இன்ஸ்பெக்டர், போலீசார் தங்குவதற்கான 342 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 79 ஏக்கரில் ரூ.89.70 கோடியில் கட்டப்பட்டுள்ளது. சக்கரக்கோட்டையில் நடந்த திறப்பு விழாவில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், டி.ஐ.ஜி., மூர்த்தி, எஸ்.பி., சந்தீஷ் தலைமை வகித்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் ஓ.என்.ஜி.சி., சார்பில் ரூ.14.78 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரத்தை டி.ஐ.ஜி., மூர்த்தி திறந்து வைத்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
பட்டாலியன் தளவாய் செந்தில்குமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.