/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவில் வலைகளை உலர்த்திய மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது
/
கச்சத்தீவில் வலைகளை உலர்த்திய மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது
கச்சத்தீவில் வலைகளை உலர்த்திய மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது
கச்சத்தீவில் வலைகளை உலர்த்திய மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது
ADDED : ஆக 06, 2025 10:39 PM

ராமேஸ்வரம்:கச்சத்தீவில் வலைகளை உலர்த்திய நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளிட்ட 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடியை சேர்ந்த மீனவர்கள் விமல்ராஜ் 24, மாதேஷ் 20, கார்த்தி 21, சக்தீஸ்வரன் 21, ஆகியோர் கடந்த இரு மாதங்களாக ராமேஸ்வரத்தில் தங்கி நாட்டுப்படகில் மீன்பிடிக்கின்றனர். நேற்று ராமேஸ்வரம் ஓலைகுடா கடற்கரையில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நடுக்கடலில் வலையை வீசி விட்டு மற்றொரு வலையை கச்சத்தீவில் காயவைத்து சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அப்போது கச்சத்தீவுக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மடக்கி கைது செய்தனர். பின் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்துறை அதிகாரிகள் மூலம் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாம்பன் மீனவர்கள் கைது ஆக.,5ல் பாம்பனில் இருந்து மீன் பிடிக்க சென்ற சீனி என்பவரது விசைப்படகில் மீனவர்கள் செல்வராஜ் 37, குருசாமி 39, பரத் 31, ரவி 47, ஜோஸ்பாரதி 22, மரியபிரவீன் 31, மனோ 32, பிலிப் 43, மேத்யூ 24, டேனியல்ராஜ் 33, ஆகியோர் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்த போது இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து புத்தளம் சிறையில் அடைத்தனர்.