/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக படகுகளை மீட்க ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை பயணம்
/
தமிழக படகுகளை மீட்க ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை பயணம்
தமிழக படகுகளை மீட்க ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை பயணம்
தமிழக படகுகளை மீட்க ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை பயணம்
ADDED : ஆக 25, 2025 01:25 AM
ராமேஸ்வரம்: இலங்கையில் விடுவிக்கப்பட்ட 12 படகுகளை மீட்டு வருவதற்காக இன்று (ஆக., 25) ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை செல்ல உள்ளனர்.
2018 முதல் 2023 வரை இலங்கை கடற்படை சிறை பிடித்த குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்களின் 12 விசைப்படகுகள் மீது இலங்கை நீதிமன்றத்தில் பலகட்டமாக நடந்த வழக்கின்படி விடுவிக்கப்பட்டன.
இப்படகுகளின் இன்ஜின் செயல்பாடு, சேதம் அடைந்த படகின் மரப்பலகைகளை சரி செய்து மீட்டு வர முதல் கட்டமாக இலங்கையில் ஆய்வு செய்ய ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை செல்ல மத்திய, மாநில அரசிடம் அனுமதி கோரினர்.
மத்திய அரசு அனுமதி வழங்கியதால் இன்று காலை ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து ஒரு படகில் மீனவர் சங்க தலைவர் சேசு உள்ளிட்ட 14 பேர் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு செல்ல உள்ளனர்.
அங்குள்ள படகுகளின் நிலை குறித்து ஆய்வு செய்து நாளை மறுநாள் (ஆக.,27) ராமேஸ்வரம் திரும்ப உள்ளனர்.