/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் 16வது நிதிக் குழுவினர் ஆய்வு
/
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் 16வது நிதிக் குழுவினர் ஆய்வு
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் 16வது நிதிக் குழுவினர் ஆய்வு
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் 16வது நிதிக் குழுவினர் ஆய்வு
ADDED : நவ 21, 2024 04:22 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 15வது நிதிக்குழு திட்டத்தில் வீடு கட்டுதல், ஜல்-ஜீவன் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மத்திய அரசின் 16வது நிதிக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
மத்திய, மாநில அரசுகளிடையே நிதிப்பகிர்வு தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரை வழங்க மத்திய அரசின் 16வது நிதிக் குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவினர் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வரவேற்றார்.
முன்னதாக 15-வது நிதிக்குழு திட்டத்தில் நடந்து முடிந்துள்ள, நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் பிரதமரின்அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டிய வீடுகளை பார்வையிட்டனர்.
அதன் பிறகு ராமநாதபுரத்தில் நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான உறுப்பினர்கள் அன்னி ஜார்ஜ் மேத்யு, மனோஜ் பாண்டா, செயலாளர் ரீத்விக் பாண்டே ரூ.20 கோடியில் புது பஸ் ஸ்டாண்டில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தனர். அம்ரூத் மற்றும் ஜல்ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் குறித்த திட்டப்பணிகளை கேட்டறிந்தனர்.
16-வது நிதிக்குழு சிறப்பு பணி அலுவலர் பிரஜேந்திர நவ்னிட், அரசு (செலவு) நிதித்துறை செயலாளர் நாகராஜன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ், கூடுதல் நிர்வாக இயக்குநர் சேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், ராமநாதபுரம் நகராட்சிக் கமிஷனர்அஜிதா பர்வின் பங்கேற்றனர்.

