/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
ADDED : டிச 25, 2024 03:07 AM

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
டிச.23ல் ராமேஸ்வரத்தில் இருந்து 383 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்தபோது அங்கு 3 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர்.
தங்கச்சிமடம் அந்தோணி ஆரோன், பூண்டிராஜ் ஆகியோரது படகில் இருந்த மீனவர்கள் வலைகளை இழுக்க தாமதமானதால் இருபடகையும் இலங்கை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர்.
அந்த படகுகளில் இருந்த மீனவர்கள் இருதயம் 59, ஆரோக்கியதாஸ் 44, அந்தோணியார் அடிமை 64, ரோகன் சியன் 53, முனியாண்டி 55, ஜெகநாதன் 60, ராமன் 52, ராமச்சந்திரன் 40, மற்றும் மாதவன் 22, அமல்ராஜ் 24, யாக்கோபு 35, கிருபாகரன் 56, அருள் தினகரன் 24, டேவிட் அடைக்கலம் 50, கார்த்திக் குமார் 27, அந்தோணி ஈசாக் 19, பூண்டிராஜ் 38, ஆகிய 17 பேரை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்களை ஜன.7 வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் 17 பேர் கைதான சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் கடிதம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டு 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.