ADDED : ஏப் 04, 2025 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னவன் 45.
இவர் ஆடுகளை வளர்த்து சந்தையில் விற்று வருகிறார். இந்நிலையில் தன் வீட்டில் இருந்து 200 மீ.,ல் உள்ள பட்டியில் நேற்று முன்தினம் இரவு 18 ஆடுகளை அடைத்துள்ளார்.
சில வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் குதறிக் கொன்றன. நேற்று காலை இதைப்பார்த்தவர் கதறி அழுதார். அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என தெரிவித்த சின்னவன் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

