/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 1844 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
/
ராமநாதபுரத்தில் 1844 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
ராமநாதபுரத்தில் 1844 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
ராமநாதபுரத்தில் 1844 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்
ADDED : மே 04, 2025 06:21 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மே 4)மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வை ஐந்து மையங்களில் 1844 பேர் எழுதுகின்றனர்.
தேசிய தேர்வு மையத்தின் மூலம் மருத்துவக்கல்விக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு இன்று மே 4ல் நடக்கிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி, சேதுபதி அரசு கலைக்கல்லுாரி, அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி, மண்டபம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி ஆகிய ஐந்து தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.
இதில் 1844 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு மதியம் 2:00 முதல் மாலை 5:20 மணி வரை நடக்கிறது.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.