/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 1.92 லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது
/
ராமநாதபுரத்தில் 1.92 லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது
ராமநாதபுரத்தில் 1.92 லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது
ராமநாதபுரத்தில் 1.92 லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியது
ADDED : ஜன 19, 2025 11:15 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 78 ஆயிரம் எக்டேரில் (1.92 லட்சம் ஏக்கர்) அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி முளைக்க துவங்கி வீணானது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மாவட்டத்தில் சம்பா பருவத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரம் காரணமாக குளங்கள், கண்மாய்களில் நீர் இருப்பு இருக்கும். இதை பயன்படுத்தி ஒரு லட்சத்து 37 லட்சம் எக்டேரில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் பருவம் தவறி 2 நாட்களாக பெய்து வரும் மழையால் வயல்களில் நெற்கதிர்கள் தரையில் சாய்ந்தன.
மேலும் மழைநீரில் மூழ்கியதில் நெற்பயிர் மீண்டும் முளைக்க துவங்கி வீணாகின. பல இடங்களில் நெற்பயிர் அழுகிவிட்டன.
இதுதொடர்பாக வைகை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் கே.பாக்கியநாதன் கூறியதாவது: விவசாயிகள் வங்கி, தனியாரிடம் கடன் வாங்கி நெல் பயிரிட்டிருந்தனர். பருவம் தவறிய மழையால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் 48 ஆயிரம் எக்டேர் உட்பட மாவட்டத்தில் 78 ஆயிரம் எக்டேரில் (1.92 லட்சம் ஏக்கர்) நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவிட்டுள்ளனர். தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் ரேண்டம் முறையில் அறுவடை செய்து கணக்கிட்டால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் நேரிடையாக அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.