ADDED : பிப் 04, 2024 11:35 PM
அ நிறம் | அளவு
தொண்டி : 130 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
இச் சம்பவம் கடந்தாண்டு அக். 3ல் தொண்டி அருகே சின்னத்தொண்டி கடற்கரை பகுதியில் முட்புதருக்குள் 130 கிலோ கஞ்சா மூடைகள் பதுக்கி வைக்கபட்டிருந்தது.
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அந்த கஞ்சா மூடைகளை தொண்டி போலீசார் கைபற்றி ஏற்கனவே 11 பேரை கைது செய்தனர்.
இவ் வழக்கு சம்பந்தமாக நேற்று முன்தினம் துானுகுடி கார்த்திக் 30, சின்னக்கீரமங்கலம் ஹரிஸ்குமார் 27 ஆகியோரை தொண்டி போலீசார் கைது செய்தனர்.
