ADDED : ஆக 26, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே சிறுநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் 60. விவசாயியான இவர் தனது சொந்த நிலத்தில் தென்னை மரங்கள் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இவரது தோப்பில் மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தில் சென்று மணல் திருடுவது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவில் சிலர் மணலை அள்ளிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த சேகர் சத்தம் போடவே அவர்கள் 1 யூனிட் மணலுடன் தப்பிச் சென்றனர்.
சேகர் டூவீலரில் விரட்டிச் சென்றார். ஆனால் மல்லனுார்–எட்டிசேரி வழியாக திருவாடானை–ஆர்.எஸ்.மங்கலம் சாலையில் வேகமாக சரக்கு வாகனம் சென்று விட்டது. புகாரில் தொண்டி போலீசார் பாண்டுகுடியை சேர்ந்த ராஜலிங்கம் 27, அவரது சகோதரர் முத்துபாண்டி 26, ஆகியோரை தேடி வருகின்றனர்.
––
