/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெறிநாய் கடித்து 2 சிறுவர்கள் காயம்
/
வெறிநாய் கடித்து 2 சிறுவர்கள் காயம்
ADDED : ஜன 05, 2025 05:16 AM

தொண்டி : தொண்டியில் வெறிநாய் கடித்து 2 சிறுவர்கள் காயமடைந்தனர்.தொண்டி லெப்பை தெரு, பலகை வில்லா தெருவை சேர்ந்த சிறுவர்கள் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வெறிநாய், இரண்டு சிறுவர்களின் காலில் கடித்தது.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டினர். காயமடைந்த சிறுவர்கள் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தொண்டியில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இரண்டு சிறுவர்களை கடித்தன. கடற்கரை பகுதியில் ஐந்து ஆடுகளை கடித்தது. நாய்த் தொல்லையால் தெருவில் நடமாட முடியாமல் அச்சமாக உள்ளது.
பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.