/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் 2 நாட்கள் நோன்பு கஞ்சி வழங்கல்
/
கீழக்கரையில் 2 நாட்கள் நோன்பு கஞ்சி வழங்கல்
ADDED : ஜூலை 05, 2025 11:13 PM
கீழக்கரை: இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் முகரம் மாதத்தில் வரும் பண்டிகையாகும்.
கீழக்கரையில் முகரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களால் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆசூரா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
ரம்ஜான் மாத நோன்பை போன்று காலை 4:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நோன்பு இருந்து பின்னர் மாலை நேரத்தில் நோன்பு கஞ்சி அருந்துவார்கள்.
கீழக்கரையில் குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நல அமைப்பு சங்கங்கள் சார்பில் பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி நேற்றும் இன்றும் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
குறிப்பிட்ட பள்ளிவாசல்களின் முன்பாக ஏராளமானோர் நோன்பு கஞ்சியை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.