ADDED : ஜன 29, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 கிலோ கஞ்சா பார்சல் கரை ஒதுங்கியது.
கடற்கரையில் நேற்று மர்ம பார்சல் ஒதுங்கியது. போலீசார் சோதனையிட்டதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பார்சல்களை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்திச் செல்ல முயன்ற போது இந்திய பாதுகாப்பு படை ரோந்து கப்பலை கண்டதும் பார்சலை கடலில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் கூறுகையில், 'தற்போது ஒரு பார்சல் மட்டும் கரை ஒதுங்கி இருக்கிறது. மற்ற பார்சல்கள் இருந்தால் ஓரிரு நாட்களுக்குப் பின் கரை ஒதுங்கும்,' என்றனர்.

