நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி முடிந்து காக்கூர் விலக்கு ரோட்டில் நடந்து சென்றனர். கருமல் கிராம பிளஸ் 2 மாணவிகள் ஜீவிதா, வினிதா மீது அவ்வழியே வந்த டிராக்டர் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் நேரில் சென்று மாணவர்கள் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதுகுளத்துார்-ராமநாத புரம் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.
காக்கூர் விலக்கு ரோட்டில் டாஸ்மாக் கடையும் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மாணவர்கள் பொதுமக்கள் அச்சப் படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட்டனர்.

