/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பைக்கில் கார் மோதி 2 தொழிலாளிகள் பலி
/
பைக்கில் கார் மோதி 2 தொழிலாளிகள் பலி
ADDED : செப் 03, 2025 11:44 PM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை நான்கு வழி சாலையில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.
பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலைராஜ் 55, பூவேந்திரன் 70. இருவரும் ஒரே டூவீலரில் வெங்காளூரில் இருந்து பரமக்குடி நோக்கி கரும்பு வெட்டும் வேலைக்கு நேற்று காலை சென்றனர். இலந்தைகுளம் அருகே மதுரை- பரமக்குடி நான்கு வழி சாலையின் குறுக்கே டூவீலரில் இருவரும் காலை 6:30 மணிக்கு ரோட்டை கடந்தனர்.
அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கார் டூவீலர் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். கார் டிரைவர் ராஜா 45, காயமின்றி தப்பினார். விபத்தின் போது அருகில் மற்றொரு டூவீலரில் சென்ற ஊரக்குடி கர்ணன் சிறிய காயங்களுடன் பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.