/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலரில் அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
/
டூவீலரில் அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
ADDED : பிப் 17, 2024 02:18 AM

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார்- -சாயல்குடி சாலையில் டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் லாரி டிரைவர்களான நண்பர்கள் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தார்.
மதுரை நவக்குளம் கோபால் மகன் பாண்டித்துரை 27, சின்ன அனுப்பானடி சேதுராமன் மகன் கருப்புசாமி 27, கமுதி அருகே ஆண்டநாயகபுரம் பாலகிருஷ்ணன் மகன் வினித்குமார் 27. மூவரும் மதுரையில் மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர்களாக பணி செய்தனர்.
நேற்று சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரைக்கு ஒரே டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றனர். கடற்கரையில் சுற்றி பார்த்துவிட்டு நேற்று மாலை 4:00 மணிக்கு மதுரை திரும்பினர்.
-சாயல்குடி-முதுகுளத்துார் ரோட்டில் ஒருவானேந்தல் அருகே சென்ற போது எதிரில் முதுகுளத்துாரில் இருந்து சாயல்குடி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. வினித்குமார், பாண்டித்துரை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கருப்புசாமி பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வினித்குமாருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை. இளஞ்செம்பூர் போலீசார் வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவர் தேரிருவேலி சந்திரசேகர் 46, என்பவரை கைது செய்தனர்.