ADDED : டிச 04, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து, நவ., 9ல் கடலுக்குச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
அவர்கள், அந்நாட்டின் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்; 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். படகின் டிரைவர்கள் என்பதற்காககிறிஸ்துராஜா, 45, ஜெரோம், 48, கிங்ஸ்லி, 45, ஆகியோருக்கு, தலா ஆறு மாதம் சிறை, தலா, 11.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர்.