/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வில் வாகை
/
ரெகுநாதபுரத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வில் வாகை
ரெகுநாதபுரத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வில் வாகை
ரெகுநாதபுரத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வில் வாகை
ADDED : டிச 01, 2024 07:16 AM

ரெகுநாதபுரம்,: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் பழமை வாய்ந்த மஞ்ச குளத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு வில்வாகை மரங்கள் உள்ளன.
மரத்தின் அருகே மஞ்சக்குளத்து காளியம்மன் சன்னதி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வளாகத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கூறியதாவது:
வில்வாகை மரம் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பொதுவாக காணப்படுகிறது. இது 30 முதல் 40 மீ., உயரம் வரை வளரும். மரத்தின் இலைகள் பெரிதாகவும் முட்டை வடிவிலும் இருக்கும். இதன் பூக்கள் சிறியதாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
வில்வாகை மரத்தின் பழங்கள் சிறிதாகவும் கருப்பு நிறத்திலும் இருக்கும். மரத்தின் பட்டை மருத்துவ குணம் வாய்ந்தது. இதன் துாய்மையான காற்று உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வல்லது. 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வில்வாகை மரத்தை பார்த்தவுடன் பாம்பின் உடல் தோற்றத்தை போல காணப்படும்.வழிபாட்டிற்குஉரிய இந்த மரத்தை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.
ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு சில மாதங்களுக்குப் பிறகு இங்குள்ள மஞ்சக்குளத்து காளியம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து பொங்கலிட்டு செல்வது வழக்கம் என்றனர்.